RSS

இள முதுமை

வயதாகிவிட்டது நண்பா…

mp3 கூட கனக்கிறது…
முப்பது loginகளை மூன்று passwordகள் வைத்து காலம் தள்ளுகிறேன்…
குழந்தைகளின் குதூகல சத்தம் கூட இரைச்சலாய் கேட்கிறது…
சுழி கோலம் கூட நேராய் இருக்கலாமென தோன்றுகிறது …

மனைவி அழகாயிருப்பதை கூட அங்கீகரிக்க மறந்து விடுகிறேன்…
ரஜினி படம் கூட போரடிக்கிறது …
லொள்ளு சபாவிலும் மனது லாஜிக் பார்க்கிறது …
MS Word இல் கூட பக்க கணக்கு பார்க்கிறேன்…

நட்பாய் ஆணும் பெண்ணும் பேசுவது கொலை குற்றமாய் தெரிகிறது …
நமக்கு தெரிந்தது கூட மோடிக்கு ஏன் தெரியவில்லை என மனம் அங்கலாய்க்கிறது …
அப்பா அழகாய் தெரிகிறார்…
சகோதிரிகளுக்கு பொங்கல் பணம் அனுப்ப தோன்றுகிறது…

தத்துவங்கள் பிடிபட ஆரம்பித்திருக்கிறது….
நாத்திகம் பேசுதல் குறைந்திருக்கிறது …
இளமை காதலில் காமம் தூக்கல் என்பதும் , முதுமை காமத்தில் காதல் தூக்கல் என்பதும் விளங்குகிறது…
அறிவுரைக்கவும் அறிவுரை கேளாதிருக்கவும் கேடயமாய் வயது பயன்படுகிறது…

இன்னும் இளமையாயிருக்கிறாய் என எதேச்சையாய் எவனோ சொன்னது திருக்குறள் வாசகமாய் கேட்கிறது…

பெண்கள் சகஜமாய் பேசுகிறார்கள் …
நவீன தொழில்நுட்ப தகவல்கள் பிறர் சொல்ல கேட்டு கொள்கிறேன்…
Youtubeஇல் பூஜை புனஸ்காரங்கள் பற்றியும் தகவல் உள்ளதென கண்டறிகிறேன்…

ஏதும் சாதிக்காமலேயே செத்து விடுவோமோவென்ற பயம் முதன்முதலாய் எட்டி பார்க்கிறது …
அழிக்க முடியாதது சாதி என்ற அப்பட்ட உண்மை புரிகிறது …
பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றின் மூலப்பொருட்கள் பற்றி ஆராய்கிறது மனது …

ராஜாவா ரஹ்மானா என்பதில் ராஜா அறுதிப்பெரும்பான்மையில் வென்றார் …
பிறந்த தேதி கேட்கப்படுகையில் நாளும் மாதமும் மட்டுமே கூறுகிறேன்…
சமூகத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமென ஞானம் உதிக்கிறது…
பூசி மொழுகும் பேச்சுக்கள் பிடிக்காமல் போகின்றன…

இவை எல்லாம்தான் வயதாகியதன் அறிகுறியாயின்…

வயதாகித்தான் விட்டது போலும் !!!

 
Leave a comment

Posted by on March 29, 2015 in Uncategorized

 

தல

தப்பியிருக்கலாம்…
சில தருணங்களில் …
தம்பிரான் புண்ணியத்தால்!

போயிருக்கலாம்…
பல பொழுதுகளில்…
தரித்த பாகையோடு !

பிழைத்த கணங்கள் யாவையும்…
பிழையாய் கிட்டிய பிச்சைகள் !

பிசகலாம் எப்போது வேண்டுமாயினும்…
இயற்கையின் இம்மி கருணை !

அப்படி ஒன்றும் அவசியமில்லை கேசம்…
சுவாசத்தை காட்டிலும் !!

அணிவோம் தலை கவசம் !!!

 
Leave a comment

Posted by on March 24, 2015 in Uncategorized

 
Image

Naked Reality

image

 
Leave a comment

Posted by on March 16, 2015 in Uncategorized

 

Pass on

Pass on

 
Leave a comment

Posted by on August 25, 2014 in Uncategorized

 

தூ……………

பள்ளி அறையை கூட …
பள்ளியறையாய் …
பார்த்துவிட்ட பாவிகளே !

இன்னும் எங்கேபோய் …
ஒளித்து வைப்போம் …
எங்கள் கண்மணிகளை !!

எஞ்சியிருப்பது…
கருவறை மட்டும்தானடா…
காமாந்தகர்களே!!!

தூ……………

 
Leave a comment

Posted by on July 19, 2014 in Uncategorized

 

சைட்

எதையும்
கூர்ந்து நோக்கின்
கவிதை பிறக்குமாம்!

இங்கோ தலைகீழ்…

ஒரு கவிதையே தோன்ற…
கூர்ந்து நோக்கலானேன் !!

 
Leave a comment

Posted by on June 27, 2014 in Uncategorized

 

HUMP டி…. DUMP டி …

வேகத்தடை …
ஒவ்வொன்றையும்…
வெகுமரியாதையாய்…
எழுந்து நின்று …
எதிர்கொள்கிறேன் …
அதிவேகமாய் செல்கையிலே !

 
Leave a comment

Posted by on March 5, 2014 in Uncategorized

 
 
Follow

Get every new post delivered to your Inbox.